Take a fresh look at your lifestyle.

ராகு கேது- பட விமர்சனம்

103

ராகு கேது- பட விமர்சனம்
நவ கிரகங்களில் சாயா கிரகங்கள் என்றழைக்கப்படும் ராகுவும், கேதுவும் எப்படி உருவாகின என்று சொல்லும் கதையை மேடை நாடகங்களில் புகழ்பெற்ற டி. பாலசுந்தரம் இந்த ராகு கேது படத்தை இயக்கி இருக்கிறார். அதே போல் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களை எழுதி உள்ள கே.பி.அறிவானந்தம் அற்புதமான தமிழ் இலக்கிய சொல்களை பயன்படுத்தி புராணத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
தேவர்களும் ,அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தபோது. தேவர்கள் வேடத்தில் வந்து அமுதத்தை அருந்திய
அசுர இளவரசனான சுபர்பானு, எப்படி மகாவிஷ்ணுவால் வதைக்கப்பட்டார். அதன் பிறகு எப்படி ராகு, கேது உருவாகிறார்கள் என்பதை இந்த கால இளைஞர்களுக்கு உணர்த்தும் வகையில் வெளிவந்துள்ள படம் தான் ராகு- கேது. தற்போது பிரம்மாண்ட பட்ஜெட்களில் படங்களைப் பார்த்து பிரமித்த இந்த தலைமுறையினர் இந்த படத்தை ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே.