Take a fresh look at your lifestyle.

நடிகர் விஜய் மீது சீமான் கடும் தாக்கு

142

நடிகர் விஜய் மீது சீமான் கடும் தாக்கு

அண்ணா வழியில் என விஜய் கூறுகிறார், அண்ணா வழியில் தான் 60 ஆண்டுகளாக தி.மு.க. பயணிக்கிறது. அண்ணா வழியில் அல்லாமல் வேறு எந்த வழியில் தி.மு.க., அ.தி.மு.க.பயணிக்கிறது-நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

அரசியலுக்கு வந்துள்ள விஜய் என்ன மாறுபட்ட கொள்கையை வைத்துள்ளார்? விஜயகாந்த் அரசியலுக்கு வந்த போது ஏற்படாத எழுச்சியா தற்போது ஏற்பட்டுள்ளது. திரை வெளிச்சத்தில் அவ்வப்போது சிலர் அரசியலுக்கு வந்து கொண்டிருப்பார்கள்.

தமிழகத்தில் உள்ள வட இந்தியர்கள் அனைவரும் பாஜகவின் வாக்குகள்தான். பெருந்துறை, கோவை தெற்கில் வட இந்தியர்கள் வாக்களித்தால் வெற்றி என்ற நிலை உள்ளது.

தமிழகத்தை இந்தி பேசும் இன்னொரு மாநிலமாக்க முயற்சி நடக்கிறது. வட இந்தியர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை தரக்கூடாது.நான் இருக்கும் வரை அது நடக்காது