Take a fresh look at your lifestyle.

ஜேசுதாஸை சந்தித்த ஏ ஆர் ரஹ்மான்

58

ஜேசுதாஸை சந்தித்த ஏ ஆர் ரஹ்மான்
அமெரிக்கா சென்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், அங்கு மூத்த பின்னணிப் பாடகர் கே.ஜே. ஜேசுதாஸை சந்தித்தது தனது எக்ஸ் பக்கத்தில் குறித்து பதிவிட்டுள்ளார்.
“எனது சிறுவயது அபிமானியை அவரது டல்லாஸ் இடத்தில் சந்தித்தேன். அவரது ஆராய்ச்சிப் பணிகளையும், இந்திய பாரம்பரிய கர்நாடக இசையின் மீதான அவரது ஆர்வத்தையும் கண்டு வியந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.ரஹ்மான் இசையில் ‘பச்சைக் கிளிகள் தோளோடு, நெஞ்சே நெஞ்சே,’ உள்ளிட்ட சில பாடல்களைப் பாடியிருக்கிறார்.60 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா இசை, பக்திப் பாடல்கள் என இந்திய மொழிகளில் பலவற்றில் பாடியவர் ஜேசுதாஸ். சமீப காலங்களில் சினிமாவில் பாடுவதை குறைத்துக் கொண்டுவிட்டார்.