Take a fresh look at your lifestyle.

‘பிஎம்டபிள்யு1991’படம் மூலம் இயக்குனரான வில்லன் நடிகர்

107

‘பிஎம்டபிள்யு1991’படம் மூலம் இயக்குனரான வில்லன் நடிகர்
பையா, கருங்காலி, வி3 உள்ளிட்ட பல படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்த பொன்முடி திருமலைசாமி இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.கிரீன்விஷ் சினிமா சார்பில் வில்வங்கா தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘பிஎம்டபிள்யு1991’ என்ற படத்தை இயக்கி இயக்குனராக மாறி இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் பொன்முடி நடிக்க, அவருடன் நடிகை மணிமேகலை மற்றும் படத்தின் மைய கதாபாத்திரமாக மதுரையை சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் கௌதம் நடித்துள்ளார்.மேலும் முக்கிய கேரக்டரில் சாப்ளின் பாலு நடித்துள்ளார்.இதுவரை பல சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு இப்படம் அனுப்பப்பட்டு 22 விருதுகளை பெற்றுள்ளது. இன்னும் பல திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டும் இருக்கிறது.