Take a fresh look at your lifestyle.

மல்லுவுட்டில் என்ட்ரியான கதிர்

103

மல்லுவுட்டில் என்ட்ரியான கதிர்
‘பரியேறும் பெருமாள்’, ‘சுழல்: தி வோர் டெக்ஸ்’ மற்றும் ‘விக்ரம் வேதா’ ஆகிய படங்களில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் பெற்ற கதிர் தற்போது மலையாள சினிமாவில் ‘மீஷா’ என்ற படம் மூலம் அறிமுகமாகிறார். இந்தப் படத்தை இயக்குனர் எம்.சி. ஜோசப் இயக்கியுள்ளார்.

மலையாள சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான இது தமிழ் ரசிகர்களுக்காக தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், படம் நேற்று கேரளா மற்றும் தமிழ்நாடு முழுவதும் வெளியாகி சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.