‘ஜூடோபியா 2’ படத்தின் புதிய டிரெய்லர்
வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸின் சாகசப் படமான ‘ஜூடோபியா 2’-ன் புதிய டிரெய்லர் மற்றும் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்தத் திரைப்படம் இந்தியாவில் நவம்பர் 28 ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. முதல் படத்தை மிகவும் சிறப்பானதாக மாற்றிய பல நடிகர்களுடன் மீண்டும் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. இந்த முறை இன்னும் பல புதிய நடிகர்களுடன் சேர்ந்து எங்கள் அற்புதமான உலகை விரிவுபடுத்தி இருக்கிறோம் என்று வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸின் தலைமை படைப்பாக்க அதிகாரியும், இயக்குநருமான ஜேரெட் புஷ் கூறியுள்ளார்.
Prev Post