இது எனக்காகவே காத்திருந்த கேரக்டர் பிந்து மாதவி உருக்கம்
மு. மாறன் இயக்கத்தில்,ஜிவி பிரகாஷ் நடித்துள்ள படம் பிளாக்மெயில். இதில் முக்கியமான ஒரு கேரக்டரில் பிந்து மாதவி நடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 1 அன்று வெளியாக உள்ளது. இந்த நிலையில் படம் பற்றி பிந்து மாதவி கூறியது, இயக்குநர் மு. மாறன் இந்த கதையை விவரித்த நேரத்தில், அது என்னுடன் உடனே கனெக்ட் ஆனது. இது எனக்காகவே காத்திருந்த ஒரு கேரக்டர் போல உணர்ந்தேன் , உணர்வும் ஆழமும் கலந்து அவர் உருவாக்கிய என் கேரக்டர் எனக்கு ஒரு பெரிய பொறுப்பையும் தந்தது என்றார்.
Prev Post
Next Post