சண்டைக் காட்சியில் மிருணாள் தாக்கூர் காயம்
பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர், டக்கோயிட் எ லவ் ஸ்டோரி என்ற தெலுங்கு படத்தில் ஆத்வி சேஷ் உடன் இணைந்து நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் படமாக்கப்பட்டு வந்தது. அப்போது எடுக்கப்பட்ட சண்டைக் காட்சியில் ஏற்பட்ட திடீர் விபத்தில் ஹீரோ ஆத்வி சேஷ்,
மிருணாள் தாக்கூர் ஆகியோர் காயம் அடைந்தனர்.இருவருக்கும் உடனே மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு சிறிது ஓய்வுக்கு பிறகு மீண்டும் ஷூட்டிங் இல் இருவரும் பங்கேற்றனர்.

