Take a fresh look at your lifestyle.

தர்ஷனை ஹீரோவாக போட நினைத்த அறிவழகன்

113

தர்ஷனை ஹீரோவாக போட நினைத்த அறிவழகன்
அறிமுக இயக்குநர் கௌதம் கணபதி இயக்கத்தில்,தர்ஷன் ஹீரோவாக நடித்துள்ள படம் “சரண்டர்”. காவல்துறை பின்னணியில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை விஆர்வி.குமார் தயாரித்துள்ளார்.வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.இதில் பங்கேற்ற இயக்குனர் அறிவழகன் பேசியது,என்னுடைய உதவி இயக்குனர் கௌதம் இயக்கியுள்ள படம் சரண்டர். இந்த மொத்த குழுவும் என்னுடன் வேலை செய்தவர்கள் தான்.டிரெய்லர் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.நான் லவ் சப்ஜெக்ட் எடுத்தால் தர்ஷனை ஹீரோவாக போட வேண்டும் என நினைத்தேன். கௌதம் அவரை இப்படத்தில் நடிக்க வைத்தது மகிழ்ச்சி. கௌதம் மிகச்சிறப்பான ஒரு படத்தைத் தந்துள்ளார் என்றார்.