Take a fresh look at your lifestyle.

அட்ரஸை தொலைத்த மக்களின் வலியை பாடலாக்கிய சினேகன்

85

அட்ரஸை தொலைத்த மக்களின் வலியை பாடலாக்கிய சினேகன்
காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரிப்பில், இராஜமோகன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘அட்ரஸ்’. கேரளாவை சேர்ந்த தியா, குஜராத்தை சேர்ந்த பூஜா ஜவேரி என 2 ஹீரோயின்கள் இதில் அறிமுகமாகின்றனர். தம்பி ராமையா, இசக்கி பரத், தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்துக்காக கேரள- தமிழக எல்லையில் இருக்கும் மக்கள் தங்களுக்கு எது விலாசம் என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.அட்ரஸை தொலைத்த அந்த மக்களின் வலியை கவிஞர் சினேகன் பாடலாக்கி இருக்கிறார்.மேகம் மூடிக் கொள்ளும்.. வானம் தேடிச்செல்லும்.. பூமி தலையில் தாங்கும் எங்க ஊருடா…என துவங்கும் இந்தப் பாடலில் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகும் என இயக்குனர் கூறியுள்ளார்.