Take a fresh look at your lifestyle.

திடீர் ட்ரெண்டிங் ஆன ”ஹேப்பி’ பாடல்

120

திடீர் ட்ரெண்டிங் ஆன ”ஹேப்பி’ பாடல்
ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சித்தார்த் சந்திரசேகர் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பலே பாண்டியா’. விஷ்ணு விஷால் மற்றும் பியா பாஜ்பாய் நடித்த இப்படத்திற்கு தேவன் ஏகாம்பரம் இசையமைத்திருந்தார். இதில் இடம்பெற்றுள்ள ‘ஹேப்பி’ பாடல் தற்போது திடீரென சமூக ஊடகங்களில் வைரல் ஆகி 10 லட்சம் பார்வைகளை கடந்து தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. கவிஞர் வாலி எழுதிய இப்பாடலை 20 பிரபல பாடகர்கள் பாடிய‌தோடு திரையிலும் நடித்திருந்தனர்.
சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பாடல் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.