சூர்யா பர்த்டேவுக்கு கருப்பு டீசர் பரிசு
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘கருப்பு’. இதில் திரிஷா ஹீரோயினாக நடித்துள்ளார். சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யா வக்கீலாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சூர்யாவின்50ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ‘கருப்பு’ படத்தின் டீசர் இன்று வெளியாகும் என ஆர்.ஜே.பாலாஜி அறிவித்துள்ளார்.
Prev Post
Next Post