Take a fresh look at your lifestyle.

உண்மை கதையில் நடிக்கும் மொசக்குட்டி

80

உண்மை கதையில் நடிக்கும் மொசக்குட்டி
கன்னட இயக்குனர் சசிகுமார்.எஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் “குப்பன்”. இதில் ஜெய்பீம் மொசக்குட்டி கதை நாயகனாக நடித்துள்ளார். மேலும் சிபு சரவணன், ஆதித்யா வினோத் ஆகியோருடன் வில்லன் கேரக்டரில் தயாரிப்பாளர் செவன்ராஜ் நடித்துள்ளார். படத்திற்கு சந்தோஷ் ராம் இசை அமைத்துள்ளார். படத்தை ரெட் அன் ஒயிட்
செவன்ராஜ் தயாரித்து உள்ளார். படம் பற்றி இயக்குனர் கூறியது, இது தர்மபுரி அருகே ஒரு கிராமத்தில் நடந்த உண்மைக்கதை. தனது ஒரே மகள் திடீரென்று காணாமல் போகிறாள். அவளை தேடும் தந்தையின் பயணமும், அவரது தேடுதல் வெற்றி பெற்றதா, இல்லையா, என்பதை மிகவும் உணர்ச்சிகரமாக சொல்லி உள்ளோம் என்றார்.