Take a fresh look at your lifestyle.

‘காளிதாஸ் 2’ பட டீசரை வெளியிட்ட ரவி மோகன், ஜீ.வி.பிரகாஷ்

57

‘காளிதாஸ் 2′ பட டீசரை வெளியிட்ட ரவி மோகன், ஜீ.வி.பிரகாஷ்
பரத் நடிப்பில் வெளியான‌’காளிதாஸ்’ பட வெற்றியை தொடர்ந்து அதன் இயக்குநரான ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காளிதாஸ் 2’ திரைப்படத்தில் பரத், அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், ‘ஆடுகளம்’ கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ , அபர்னதி, ராஜா ரவீந்தர், டி எம் கார்த்திக் ஆகியோருடன் நடிகை சங்கீதா- முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஃபைவ் ஸ்டார் செந்தில் தயாரித்திருக்கிறார்.
படத்திற்கு சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்ய, சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் டீசரை நடிகர்கள் ரவி மோகன் மற்றும் ஜீ. வி.பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து சொல்லிட்டார்.