Take a fresh look at your lifestyle.

கொட்டுக்காளியை தொடர்ந்து அன்னா பென் நடிக்கும் படம்

75

கொட்டுக்காளியை தொடர்ந்து அன்னா பென் நடிக்கும் படம்
திரைத்துறை,கலை நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி வரும் நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனம் திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது.கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாவீர் அசோக் தயாரிக்கும் இப்படத்தை ‘நாய் சேகர்’படத்தை இயக்கிய கிஷோர் ராஜ்குமார் இயக்குவதோடு, ஹீரோவாகவும் நடிக்கிறார். இதில் பிரபல மலையாள நடிகையும் ‘கொட்டுக்காளி’ தமிழ் படத்தில் நடித்தவருமான‌ அன்னா பென் நாயகியாக நடிக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் திரைக்கதை இருக்கும் என்பதால் அன்னா பென் போன்ற மிகவும் திறமையான நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளனர்.