Take a fresh look at your lifestyle.

நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் : பிரதீப் ரங்கநாதன்

183

நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் : பிரதீப் ரங்கநாதன்
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம் டிராகன். இப் படத்தின் 100வது நாள் வெற்றி விழா சென்னையில் நடந்தது . இதில் பிரதீப் ரங்கநாதன் பேசியது, அஸ்வத் ஓ மை கடவுளே படம் இயக்கி கொண்டிருக்கும் சமயத்தில் என்னை அப்படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க கூப்பிட்டார்.ஆனால் நான் நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பேன் என்று அவரிடம் கூறிவிட்டேன். பின்னர் லவ் டுடே படத்தை ரிலீசுக்கு முன்பு அஸ்வத்துக்கு காண்பித்தேன். அதன் பிறகு, என்னை ஹீரோவாக வைத்து ஒரு படம் எடுப்பீர்களா என்று அவரிடம் கேட்டேன். லவ் டுடே படம் ஹிட்டானதால் உடனே நாங்கள் அடுத்த படத்தில் இணைந்தோம் என்றார்.விழாவில் ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அனைவருக்கும் நினைவு பரிசை அர்ச்சனா,இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ஆகியோர் வழங்கினார்.