Take a fresh look at your lifestyle.

குற்றாலத்தில் படகு சவாரி துவக்கம்

46

குற்றாலத்தில் படகு சவாரி துவக்கம்

குற்றாலத்தில் படகு சவாரியினை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது அனைத்து அருவிகளிலும் சீரான நீர் வரத்து உள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அவ்வப்போது மிதமான சாரல் மழையும், வெயிலும் கலந்து சீசன் களைகட்டி வருகிறது.

சீசன் காலங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

அவர்களை மகிழ்விக்க சுற்றுலாத்துறை மூலம் ஐந்தருவி சொல்லும் சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தில் படகு சவாரி வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதில் இரு நபர் செல்லும் பெடல் படகிற்கு இருநூறு ரூபாயும் 4 பேர் செல்லக்கூடிய படைகளுக்கு 300 ரூபாயும் துடுப்புப்படதற்கு 350 ரூபாயும் 30 நிமிடங்களுக்கு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தற்போது 25 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன

இந்தப் படகு சவாரியினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ் .எஸ் .ஆர் .ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர்
, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜா, பழனி நாடார், பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இன்று விடுமுறை தினம் என்பதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.