Take a fresh look at your lifestyle.

28 ஆண்டுக்கு பிறகு ஜோடி சேர்ந்த சரத் – தேவயானி

92

 

28 ஆண்டுக்கு பிறகு ஜோடி சேர்ந்த சரத் – தேவயானி

 

ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 3 பிஎச்கே. இதில் சித்தார்த், சரத்குமார், தேவயானி,யோகிபாபு, சைத்ரா, மீத்தா ரகுநாத், விவேக் பிரசன்னா உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 4-ந் தேதி
ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி நேற்று நடந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சரத்குமார் பேசியது, நானும் தேவயானியும் சேர்ந்து நடித்த சூர்யவம்சம் படம்
வெளியாகி இன்றுடன் 28 வருடம் ஆகிறது.படத்தின் கதை இன்று வரை மக்கள் மனதில் நிலைத்து நிற்பது மகிழ்ச்சியாக உள்ளது. இத்தனை ஆண்டுக்குப் பிறகு மீண்டும் நாங்கள் இருவரும் சேர்ந்து இதில் நடித்தது மறக்க முடியாத ஒன்று.வீடு வாங்கும் கனவு எல்லோருக்கும் இருக்கும். அந்த கனவு பலருக்கு நனவாகாமல் சென்று விடுகிறது. அதை மக்களுக்கு நெருக்கமாக அதேநேரம் யதார்த்தமாக இயக்குநர் சித்தரித்துள்ளார் என்றார்.