Take a fresh look at your lifestyle.

இயக்குநரின் நடிகை நான்: நிமிஷா சஜயன்

85

இயக்குநரின் நடிகை நான்: நிமிஷா சஜயன்
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முரளி,நிமிஷா சஜயன் ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம்
டிஎன்ஏ. இந்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.இந்த படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்தது. இதில்
நடிகை நிமிஷா சஜயன் பேசியது, இந்தப் படத்தில் என்னுடைய நடிப்பு சிறந்ததாக இருக்கிறது என்று பாராட்டினால்.. அது இயக்குநரைத் தான் சாரும். அவர் சொல்லிக் கொடுத்ததை தான் நான் செய்திருக்கிறேன்.‌ நான் எப்போதும் போல் இயக்குநரின் நடிகையாக தான் இருக்க விரும்புகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து திவ்யா கதாபாத்திரத்தை அளித்ததற்காக நன்றி. ஒவ்வொரு படத்தில் இருந்தும் ஏதேனும் ஒரு விசயத்தை கற்றுக் கொள்கிறேன். இந்த படத்தில் நான் இரண்டு விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன் என்றார்.