நான் அதிர்ஷ்டசாலி: ஜெனிலியா
நடிகை ஜெனிலியா அமீர்கானுடன் சேர்ந்து சிதாரே ஜமீன்பர் என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். இப்படம் நேற்று முன்தினம் வெளியானது.இதையொட்டி ஐதராபாத்தில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றஜெனிலியா பேசியது, தென்னிந்திய சினிமாவில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்கள்
கிடைப்பதில்லை என்று சொல்வது தவறு. தென்னிந்திய திரை உலகம் தான் எனது கற்றல் களம். எனக்கு தமிழில் பாய்ஸ், சந்தோஷ் சுப்பிரமணியம், தெலுங்கில் பொம்மரில்லு, மலையாளத்தில் உருமி
ஆகிய படங்களில் எனக்கு அற்புதமான கேரக்டர்கள் அமைந்தது. இது போன்ற
கேரக்டர்கள் கிடைத்தால் நான் அதிர்ஷ்டசாலி.வாழ்நாள் முழுவதும் அதை நான் மறக்க மாட்டேன் என்றார்.