விஜய்யோடு நடிக்க பல வாய்ப்புகளை இழந்தேன்: மமீதா பைஜூ
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ஜனநாயகன். இதில் பூஜா
ஹெக்டே, மமீதா பைஜூ,பாபி தியோல், நரேன், ரேவதி உட்பட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ஷூட்டிங்
முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் விஜய்யுடன் நடித்த அனுபவம் பற்றி மமீதா பைஜூ கூறியது, எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம் இது. விஜய் சார் ரொம்பவும் பங்ச்சுவலான மேன். செட்டில் ரொம்ப கூலாக இருப்பார். அதே நேரம் நாம் பேசுவதை கவனமாக கேட்பார். நான் அவரிடம் நிறைய உளறிக் கொண்டே இருப்பேன். அதை எல்லாம் பொறுமையாக கேட்டு மென்மையாக சிரிப்பார். அவருடன் நடிப்பதற்காக பல வாய்ப்புகளை இழந்தேன் என்றார்.

