எல்சியு-வில் ‘பென்ஸ்’ : நிவின் பாலி உறுதி
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘பென்ஸ்’ படம் லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யூனிவர்ஸான எல்சியு -வுடன் தொடர்புடையது என்பதை நடிகர் நிவின் பாலி உறுதி செய்துள்ளார். இதன்மூலம் ‘பென்ஸ்’ படத்தில் எல்சியு-வில் ஏற்கனவே அறிமுகமான கதாபாத்திரங்களுக்கான தொடர்புகள் இடம்பெறுவது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பக்கியராஜ் கண்ணன் இயக்கும் ‘பென்ஸ்’ படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். நிவின் பாலி வால்டர் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்கிறார். ரவி மோகன், சம்யுக்தா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படத்தின் கதையை லோகேஷ் கனகராஜ் எழுதியுள்ளார்.
Prev Post