மமிதா பைஜுவுடன் குரேஷி
தமிழ் மற்றும் மலையாள சினிமாவை கலக்கி வரும் நடிகை மமிதா பைஜுவை சின்ன திரை நடிகர் குரேஷி சந்தித்துள்ளார். விளம்பரப் படத்துக்காக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதற்கான முன்னோட்டம் நடைபெற்ற நிலையில், அதில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நடிகர் குரேஷி பகிர்ந்துள்ளார்.மமிதா உடனான புகைப்படங்களைப் பகிர்ந்து, குரேஷி பதிவிட்டுள்ளதாவது: ஆம், திறமைகளின் ஒட்டுமொத்த உருவத்துடன் இருக்கிறேன். எனக்கு மிகவும் விருப்பமான நடிகை மமிதா பைஜு உடனான இனிய நினைவுகள் எனப் பதிவிட்டுள்ளார்.நடிகர் குரேஷியின் வளர்ச்சிக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.