ரஜினி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் ஸ்ரீ லீலா
நடிகர் ரஜினிகாந்த் தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் படத்தில் நடித்து வருகிறார். சிம்ரன் மற்றும் ராஷி கண்ணா ஹீரோயின்களாக நடித்த வருகின்றனர். இந்த படம் பற்றி அடிக்கடி ரசிகர்களுக்கு இயக்குனர் அப்டேட் கொடுத்து வருகிறார்.மைசூரில் நேற்றுடன் முடிவடைந்த மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு குறித்து இயக்குனர் அப்டேட் ஒன்றைக் கொடுத்திருந்தார். அதேசமயம், படத்தில் நடிக்கும் ராஷி கண்ணா, நடிகர் ரஜினிகாந்த், நடிகர் ராம் பொதினேனி ஆகியோருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து பின் அதை டெலிட் செய்து படத்தில் ராம் பொதினேனியும் நடிக்கிறார் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்.அடுத்து மைசூரில் நடந்தது பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு என்பது அதன் புகைப்படங்கள் “லீக்” ஆன சில வீடியோக்களை பார்த்ததுமே புரிகிறது. அதில் “பராசக்தி” நடிகை ஸ்ரீலீலா சிறப்பு நடனமாடி இருக்கலாம் என்ற ஒரு தகவலும் வெளியாகி உள்ளது.
Next Post