மீண்டும் தள்ளிப்போன ‘மிஸ்டர் பாரத்’
இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப்போடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜூலை மாதம் வெளியாக இருந்த இப்படம், விஜய்யின் ‘ஜன நாயகன்’ பட ரிலீஸ் காரணமாக அக்டோபர் 1-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், இந்த வாரமும் அதிக படங்கள் வெளியாவதால் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் வெளியீடு மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பிரபல யூடியூப் கிரியேட்டர்களான பாரத் மற்றும் நிரஞ்சன் ஆகியோரின் முதல் திரைப்படமாக ‘மிஸ்டர் பாரத்’ உருவாகியுள்ளது. நிரஞ்சன் இயக்கியுள்ள இதில் பாரத் ஹீரோவாகவும், சம்யுக்தா விஸ்வநாதன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். பால சரவணன், ஆர். சுந்தர் ராஜன், நிதி பிரதீப், ஆதித்யா கதிர், லிங்கா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். தி ரூட் நிறுவனத்தின் ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சுதன் சுந்தரம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.