Take a fresh look at your lifestyle.

யோகி பாபு, சத்யா இணையும் ‘கோல்டன் பாக்கியம்’ ஃபர்ஸ்ட் லுக்

2

யோகி பாபு, சத்யா இணையும் ‘கோல்டன் பாக்கியம்’ ஃபர்ஸ்ட் லுக்
பவன் பாசம்செட்டி இயக்கத்தில் நடிகர் யோகி பாபு மற்றும் தெலுங்கு காமெடி நடிகர் சத்யா முதல் முறையாக இணைந்து நடிக்கும் படம் ‘கோல்டன் பாக்கியம்’. முழுக்க முழுக்க  காமெடி சரவெடி படமாக உருவாகும் இந்த படத்தின் டைட்டில் கிளிம்ஸ் வெளியாகி உள்ளது. நாகார்ஜுனா ரெட்டி மற்றும் பவன் பாசம் செட்டி இருவரும் இணைந்து ட்ரீம் மூவி மேக்கர்ஸ் மற்றும் நயவாயு சித்ராலு ஆகிய பேனர்களின் கீழ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் ஜெயஸ்ரீ மற்றும் அதிராஜ் கதாநாயகிகளாக நடிக்க, வென்னேல கிஷோர், சுதர்சன், கிஷோர் திருமலா, ரோகிணி, தனிகெள்ளா பரணி மற்றும் சுனில் ரெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். பப்லு அஜு  ஒளிப்பதிவு செய்ய, பவன் சி.எச்.இசையமைக்கிறார்.