மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ டிசம்பரில் ரிலீஸ்
மணிகண்டன் நடிப்பில் பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள ‘மக்கள் காவலன்’ படம் வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மணிகண்டனின் பிறந்த நாளையொட்டி இந்த வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. பைசன் காளமாடன் பட வெற்றிக்கு பிறகு இரு தயாரிப்பு நிறுவனங்களும் மீண்டும் சேர்ந்து இதை தயாரித்துள்ளனர். அதேபோல் குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்த மணிகண்டன் இதில் ஹீரோவாக நடிக்கிறார். இயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி, இயக்கியிருக்கும் இப்படம்,கண்ணியத்துடன் வாழ விரும்பும் ஒரு சாதாரண மனிதனின் கதையை உரக்க பேசுகிறது. படத்திற்கு பிரதீபன் செல்வரத்னம் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.