அன்னக்கிளியே மியூசிக் வீடியோ ஆல்பம் ரிலீஸ்
சுயாதீன இசை கலைஞர் ஸ்மித் ஆஷர் இசையில் உருவான ‘அன்னக்கிளியே’ எனும் மியூசிக் வீடியோ ஆல்பத்தை அனிருத்தின் இசை நிறுவனமான அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பாடலை பாடலாசிரியர் தீக்ஷிதா எழுதி பாடியிருக்கிறார். அவருடன் ஸ்மித் ஆஷர் இணைந்து பாடியிருக்கிறார். இந்த பாடலில் நடிகர் பவன் அலெக்ஸ் , நடிகை பிரகதி ஸ்ரீவத்சவா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்தப் பாடலில் அழகான காட்சிகளுடன் வி எஃப் எக்ஸ் காட்சிகளும் இடம்பெற்று பாடலின் தரத்தை சர்வதேச அளவிற்கு உயர்த்தி இருக்கிறது.இந்த பாடலுக்கான வீடியோவை விக்கி பப் இயக்க, ஜே சரோலா ஒளிப்பதிவு செய்ய, தீஜோ பரத்வாஜ் தயாரித்திருக்கிறார். இந்த பாடலை அனிருத் அவருடைய பிரத்யேக யூடியூப்பில் வெளியிட்டிருக்கிறார்.
Prev Post
Next Post