Take a fresh look at your lifestyle.

ஆதிக்கு முத்த மழை பொழிந்த கானா கிங்!

1

ஆதிக்கு முத்த மழை பொழிந்த கானா கிங்!

ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி நடித்த மீசைய முறுக்கு-2 படம் கடந்த வாரம் வெளியாகி இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் வெளியாகி நான்கு நாட்களில் 51.3 கோடி அளவுக்கு வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. வடசென்னை பின்னணியில் கானா பாடலின் பெருமையை சொல்லும் படமாக இது வெளியாகியிருந்தது. இந்த படத்தைப் பார்த்த இசையமைப்பாளர் தேவா, மிகவும் நெகிழ்ந்து போய் படத்தின் இயக்குநர் மற்றும் ஹீரோவான ஹிப்ஹாப் தமிழா ஆதியை அழைத்து முத்தமிட்டு வாழ்த்தி இருக்கிறார்.இந்த தருணத்தை ‘இது போதும் எனக்கு இது போதுமே’ என்ற வரிகளைப் பகிர்ந்து தேவாவிற்கு தனது நன்றிகளை இன்ஸ்டாகிராமில் ஆதி தெரிவித்துள்ளார்.