மைசூரில் தர்மன் பட ஷூட்டிங்
ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தர்மன் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் 2 கட்ட படப்பிடிப்பு சென்னையில் வேகமாக நடைபெற்று முடிந்தது. தற்போது படக்குழு மைசூர் சென்று அங்கு முக்கியமான காட்சிகளை படமாக்கி வருகின்றனர். இந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்கும் முன்பு தினமும் காலையில் நடிகர் ரஜினி நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். நேற்று அவருடன் நடிகை ராஷிக் அண்ணா மற்றும் தெலுங்கு இளம் நடிகர் ராம் பொத்தினேனி ஆகியோரும் நடை பயிற்சி சென்று ரிலாக்ஸ் செய்து, ஜாலியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். இதனிடையே ஜெய்லர் 2 படத்தில் இடம் பெற்றுள்ள ஒன் நேம் என்ற வீடியோ பாடல் நேற்று மாலை வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.