மதுரையில் கிடா விருந்துடன் தொடங்கிய தனுஷ் பட ஷூட்டிங்
ஓம் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இதில் பிரீத்தி முகுந்தன் கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, காளி வெங்கட், உறியடி விஜயகுமார் உள்பட பலர் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் சார்பில் நாகவம்சி மற்றும் ஹரிதா லிங்கசாமி, சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரிக்கின்றனர். சிவகங்கை அருகே உள்ள மாரநாடு கருப்பணசாமி கோவிலில் படத்தின் பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி படம் வெற்றி பெற வேண்டி கருப்பணசாமிக்கு 18 அடி உயர அரிவாளை காணிக்கையாக வழங்கினார். 16 கிடாக்கள் வெட்டப்பட்டு சுமார் 1000 பேருக்கு கிடா விருந்து வைக்கப்பட்டது.
Prev Post
தமிழகத்தில், சில முக்கியமான கோவில்களில் யானைகள் வாங்க, ஹிந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது.
Next Post
