Take a fresh look at your lifestyle.

மஹாவீர் கர்ணன் ஆக ராகவா லாரன்ஸ்

3

மஹாவீர் கர்ணன் ஆக ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் நடிக்க, ரமேஷ் வர்மா இயக்கத்தில் ஐந்து மொழிகளில் உருவாகும் படம் ‘மஹாவீர் கர்ணா’.பென் மூவீஸ் சார்பில் ஜெயந்திலால் கடா வழங்க, ஆர்வி ஸ்டூடியோஸ் – ஸ்ரீ நீலாத்ரி புரொடக்‌ஷன்ஸ்  இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது.மகாபாரத இதிகாச நாயகர் களில் ஒருவரான மஹாவீர் கர்ணன் படத்தை . ரூ.150 கோடி பொருட் செலவில் தயாராகவுள்ளனர்.கௌரவம், விசுவாசம், தியாகம் தான் கர்ணனின் விதியை நிர்ணயித்தன. அந்த மாவீரனின் கதையை உணர்வுபூர்வமாகவும், பிரம்மாண்டமாகவும் சொல்லவிருக்கிறார் இயக்குநர் ரமேஷ் வர்மா. படத்தின் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாக உள்ளன.இப்படம் 2027-ல் வெளியாகிறது.