Take a fresh look at your lifestyle.

தமிழக அரசு ஓடிடி தொடங்கனும்: விஜய் விஸ்வா

48

தமிழக அரசு ஓடிடி தொடங்கனும்: விஜய் விஸ்வா
மதுரையை சேர்ந்த பொறியியல் பட்டதாரி யான விஜய் விஸ்வா, சினிமாவில் நடிகராக விரும்பினார், அட்டக்கத்தி மற்றும் குட்டி புலி ஆகிய படங்களில் சின்ன கேரக்டரில் நடித்தார். அதன் பிறகு 2014ல் எஸ்.எஸ். குமரன் இயக்கிய கேரளா நட்டிலாம் பெண்களுடனே படத்தில் ஹீரோவாக நடித்தார். அதன் பிறகு டூரிங் டாக்கீஸ் படத்தில் நடித்தார். இப்படி தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் அவருக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை. தற்போது சராஜ்சீலன் இயக்கியுள்ள ‘பாரிஸ் கபே’. படத்தில் முக்கியமான கேரக்டரில் விஜய் விஷ்வா நடித்துள்ளார். நடிப்புத் தவிர வி.வி என்டடெயின்மென்ட் நிறுவனத்தை நடத்தி வரும் விஜய் விஷ்வா, சமுதாயப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். தனது சோசியல் மீடியா மூலம் சமுதாயத்திற்கு பயனுள்ள விஷயங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தான் சார்ந்துள்ள சினிமா துறைக்கு உதவ ஒரு கோரிக்கையை முதல்வருக்கு வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறியது, தற்போது சினிமா துறை மோசமாக உள்ளது. தயாரிப்பாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை. முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியவில்லை. இதை மனதில் வைத்து நமது தமிழக முதல்வர் விஜய்க்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். நிறைய சின்ன படங்கள் வருகிறது, அதற்கு சரியான அங்கீகாரம் இல்லை. எனவே தமிழக அரசு ஒரு ஓடிடி பிளாட்பார்ம் தொடங்கினால் சினிமாவில் உள்ள எல்லோருக்கும் ரொம்ப உதவியா இருக்கும் இது என்னுடைய வேண்டுகோள் என்றார்.