“மஹாவீர் கர்ணா” டிசம்பர் 4ம் தேதி ரிலீஸ்
ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் கமர்ஷியல் சினிமா என பல்வேறு களங்களில் தனது திறமையை வெளிப்படுத்திய இயக்குநர் ரமேஷ் வர்மா, தற்போது மகாபாரதத்தின் காலத்தால் அழியாத கதாபாத்திரமான கர்ணனின் கதையை புதிய களத்தில் படைக்கிறார். “மஹாவீர் கர்ணா” என்ற படத்தை புதிய வடிவத்தில் உணர்வுப்பூர்வ தாக்கத்தையும், நவீன விஷுவல் எஃபெக்ட் ஸ்களையும் சேர்த்து ஹைப்ரிட் லைவ் ஆக்ஷன் முறையில் உருவாக்கியுள்ளார். இந்த படத்தை பென் மூவீஸ், ஸ்ரீ நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்வி ஸ்டுடியோஸ் இணைந்து இந்திய சினிமாவில் இதுவரை காணாத வகையில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர். நேற்று இப்படத்தின் டீசர் வெளியான நிலையில் வரும் டிசம்பர் 4ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.
Prev Post
Next Post
