Take a fresh look at your lifestyle.

இன்றைய தலைப்புச் செய்திகள் 

26

இன்றைய தலைப்புச் செய்திகள்

முதலமைச்சர் அலுவலக டெண்டர் இறுதியாகும் முன்பே பணிகளைத் தொடங்கிய விவகாரம். பதிலுரையிலும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம் அளிக்காததால் வலுக்கும் சந்தேகம்.

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அதிகாரப்பூர்வ கண்டனம் தெரிவிக்காத தமிழ்நாடு அரசு. சட்டப்பேரவையில் கர்நாடகத்தின் versionயே அமைச்சர் எதிரொலித்ததாக உதயநிதி ஸ்டாலின் கண்டனம்.

தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்தை முதலில் பாட எந்த தடையும் இல்லை. தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதை யாரும் தடுக்கவில்லை என்றும் உயர் நீதிமன்றம் விளக்கம்.

சென்னை பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்க ஒப்புதல். 15 ஆண்டுகால காத்திருப்புக்கு பிறகு ரயில்வே வாரியம் ஒப்புதல்.

சென்னை-மாமல்லபுரம்-புதுச்சேரியை இணைக்கும் வகையில் புதிய கடல்வழி உயர்மட்டச் சாலை. பயணிகள் படகுப் போக்குவரத்து சேவை தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அறிவிப்பு.