Take a fresh look at your lifestyle.

செல்போனால் நடிகை ஷகிலாவுக்கு கழுத்து நரம்பு பாதிப்பு

53

செல்போனால் நடிகை ஷகிலாவுக்கு கழுத்து நரம்பு பாதிப்பு
பிரபல நடிகையான ஷகீலா, நீண்ட நேரம் தொடர்ந்து செல்போன் பயன்படுத்தியதால் கழுத்துப் பகுதியில் கடுமையான நரம்பு பாதிப்பு ஏற்பட்டு, தீவிர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியது வருமாறு, நான் படுக்கையில் ஒருபுறமாகச் சாய்ந்து படுத்துக்கொண்டு மணி கணக்கில் கேம்கள் விளையாடியதும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்ததுமே தனது நரம்பு மண்டலம் கடுமையாகப் பாதிக்கப்படக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சிகிச்சைகளுக்காகக் கடும் உடலளவிலான வலியை அனுபவித்ததுடன், சுமார் ரூ.3 லட்சம் வரை செலவாகியுள் ளதாகக் கூறியுள்ள அவர், பொதுமக்கள் அனைவரும் செல்போன் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என்றும், குறிப்பாகக் குழந்தைகளை அதிகத் திரைப் பயன் பாட்டிலிருந்து உடனடியாகத் தள்ளி வைக்க வேண்டும் என்றும் எச்சரிக்கையுடன் கூடிய விழிப்புணர்வுக் கோரிக்கையை விடுத்துள்ளார்.