Take a fresh look at your lifestyle.

துபாய் பெண் இயக்குநரின் தமிழ் படம்

36

துபாய் பெண் இயக்குநரின் தமிழ் படம்
துபாயைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தொழில்முனைவோ ரான ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது திரைப்படப் பயணத்தின் அடுத்த முக்கிய அத்தியாயத்தைத் தொடங்கத் தயாராகி வருகிறார். சென்னையில் தனது படைப்பாற்றல் சார்ந்த செயல்பாடுகளை விரிவுபடுத்துவதோடு, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் திரைப்படத் துறைகளைச் சேர்ந்த கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளுடன் இணைந்து பணியாற்ற தயாராகி வருகிறார்.சென்னையில் பிறந்து, தற்போது துபாயில் வசித்து வரும் அவர், உளவியல் சார்ந்த த்ரில்லர்கள், சமூகப் பிரச்சினைகள், மனித நடத்தை மற்றும் சமகாலக் கருப்பொருட்களை மையமாகக் கொண்ட படங்களின் மூலம் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.தனது ஸ்சென் பிலிம் புரொடக்ஷன் நிறுவனம் மூலம் இதுவரை 20-க்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கி, தயாரித்துள்ளார். தற்போது சென்னையில் முகம் மட்டும் உள்ள அவர் தமிழ் படம் ஒன்றை இயக்க திட்டமிட்டு வருகிறார்.