அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிக்கும் அன்பில் அவன் பட பர்ஸ்ட் லுக்
ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அன்பில் அவன்’.இதில் பிரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர், பாலு, மஹா, டெல்லி கணேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுத, கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். காதல் கதையாக தயாராகி இருக்கும் இந்த படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. வரும் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் அபிநயா செல்வம்- கவிதா பாண்டியன், நடிகர் அசோக் செல்வன், நடிகை ப்ரீத்தி முகுந்தன், இயக்குநர் ஆர். கார்த்திகேயன் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
Prev Post
