Take a fresh look at your lifestyle.

அருண் விஜயின் இருளன் ஃபர்ஸ்ட் லுக்

45

அருண் விஜயின் இருளன் ஃபர்ஸ்ட் லுக்

குட்டி புலி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் முத்தையா. தொடர்ந்து கொம்பன், மருது என வெற்றிப் படங்களை இயக்கினார்.கடைசியாக இவர் இயக்கிய ராம்போ நேரடியாக ஓடிடியில் வெளியானது. இந்தப் படத்தில் நாயகனாக அருள்நிதி நடித்திருந்தார். தற்போது நடிகர் அருண் விஜய் நடிக்கும் ’இருளன்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில், “இது போர்குடி காவல் இனத்தின் வீர வரலாறு” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நாயகியாக மிர்னா நடிக்கிறார். இதில் சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தை ஷண்முக பாண்டியன் மற்றும் நேதாஜி புரடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.