Take a fresh look at your lifestyle.

கடவுள் கொடுத்த கட்டாய ஓய்வு இது: ராஷ்மிகா

5

கடவுள் கொடுத்த கட்டாய ஓய்வு இது: ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது “மைசா” என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இதில் மலைவாழ் மக்களுக்காக போராடும் வீராங்கணையாக அவர் நடித்து வருகிறார்.சமீபத்தில் படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டு ஓய்வில் இருக்கிறார்.இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாவில் கூறியது, “எனக்கு அடுத்தடுத்து ஏற்பட்ட 3வது காயம் இது. எனது உடல் ஒரு மனித உடல், மெஷின் அல்ல என்பதைப் போல நான் கையாளக் கற்றுக்கொள்ள வேண்டும்.”மைசா” படத்தின் நடனப் படப்பிடிப்பின் போது, எனது வலது இடுப்பு பகுதியில் காலையும் இடுப்பையும் இணைக்கும் நான்கு முக்கியத் தசை நார்களில் ஒன்று விலகிவிட்டது.அது மீண்டும் சரியாக இணைந்தால் மட்டுமே என்னால் காலைத் தூக்க முடியும். வலி இருந்தாலும் அது தாங்க முடியாதது அல்ல. தொடர் வேலைகளுக்கு இடையே கடவுள் எனக்குக் கொடுத்த கட்டாய ஓய்வாகவே இதைக் கருதுகிறேன்” என்றார்.