ஒரே நாளில் 2 படங்களின் அறிவிப்பை வெளியிட்ட அஜித்
குட் பேட் அக்லி படத்துக்கு பிறகு நடிகர் அஜித்குமார் கார் ரேஸில் பிஸியானதா லும், தயாரிப்பாளர் கிடைக்காததாலும் அவரின் அடுத்த பட அறிவிப்பு தள்ளிக் கொண்டே போனது. இந்த நிலையில் ஆடிப்பெருக்கு தினமான நேற்று முன்தினம் அவரின் இரண்டு படங்களின் அப்டேட் வெளியானது. ஏகே 64 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை பிரேவ் ஹாட்ஸ் புரொடக்சன் சார்பில் அவரது மனைவி ஷாலினி தயாரிக்கிறார். இம்மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது.அதேபோல் அஜித்தின் கார்பந்தயம் தொடர்பான ஸ்போர்ட்ஸ் ஆக்சன் படத்தை இயக்குனர் விஜய் இயக்குகிறார். கடந்த ஒரு வருடமாக அஜித்துடன் மலேசியா துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணித்து அவர் ரேசில் பங்கேற்கும் காட்சிகளை ஒரிஜினலாக காட்சிப்படுத்தியுள்ளார். கிளாடியேட்டர் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, கோல்டன் டிராபி பிலிம் புரொடக்சன் சார்பில் இந்த படத்தையும் ஷாலினியே தயாரிக்கிறார்.