இரண்டே நாளில் 2600 கோடியை அள்ளிய ஸ்பைடர் மேன்
ஹாலிவுட் சீரிஸ் படமான ‘ஸ்பைடர் மேன்’ படத்தின் முந்தைய பாகமான நோவே ஹோம் படம் வெளியாகி 5 ஆண்டுகளுக்கு பின் ‘ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே’ என்ற படம் கடந்த 31ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தியாவில் அதிக அளவிலான ரசிகர்கள் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருந்ததால் அதிக தியேட்டர்களில் இப்படம் வெளியிடப்பட்டது. படம் திரைக்கு வந்து முதல்நாளில் சுமார் 72.44 கோடி வசூலித்து, இந்தியாவில் முதல் நாளில் அதிகமாக வசூலித்த படம் என்ற பெருமையை பெற்றது. இதனால் 2-வது நாளில் இந்த படத்திற்கு 16,902 காட்சிகள் ஒதுக்கப்பட்டது. இதன் காரணமாக 2-வது நாளின் முடிவில் உலக அளவில் அதன் மொத்த வசூல் ரூ.2,600 கோடியாக உயர்ந்தது. முதல் நாளிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு அதிக வசூல் செய்த ஹாலிவுட் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது.
Prev Post
Next Post