முதல்வருக்கு தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை
தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவரிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ஜி.கே.எம். தமிழ் குமரன், 2015 முதல் 2022-ம் ஆண்டு வரை சிறிய முதலீட்டில் தயாரித்து வெளியிடப்பட்ட திரைப் படங்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் மானியத் தொகையை விரைவில் தயாரிப்பாளர்களுக்கு வழங்க வேண்டும். அது போல் தமிழ் திரைப் பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சொந்த இடம் குறித்து தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதையும் பரிசீலனை செய்து தக்க ஆவணம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், உங்களது கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து தக்க ஆவணம் செய்வதாக உறுதி அளித்தார். நிகழ்ச்சி முடிவில் அமைச்சருக்கு, பி.ஆர்.ஓ சங்கத் தலைவர் யுவராஜ் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.
Prev Post