ஜிடி நாயுடு மண்ணில் நடந்த ‘ஜிடிஎன்’ பட டிரெய்லர் வெளியிட்டு விழா
இந்தியாவின் சிறந்த கண்டுபிடிப்பாளரும், தொழில்துறை முன்னோடியுமான ஜி.டி. நாயுடு என்கிற கோபாலசாமி துரைசாமி நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஜி.டி.என்’ படத்தின் டிரெய்லர், கோயம்புத்தூரில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வேயில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது.இதில் ஆர். மாதவன் ஜி.டி. நாயுடுவாக நடித்துள்ளார். இப்படத்தை கிருஷ்ணகுமார் ராம்குமார் எழுதி இயக்கி யுள்ளார். வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் டிரைகலர் பிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த விழாவில் ஜி.டி. மியூசியத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அரிய விண்டேஜ் கார்களின் அணிவகுப்பு நடைபெற்றது. நவீன சொகுசு அதிவேக கார்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த விழாவில் நடிகர் மாதவன், நடிகைகள் துஷாரா விஜயன், பிரியாமணி மற்றும் இயக்குனர் கிருஷ்ண குமார் ராம்குமார் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.