Take a fresh look at your lifestyle.

ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் ‘7 ஸ்டார் பாய்ஸ்’

35

ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் ‘7 ஸ்டார் பாய்ஸ்’
இயக்குநர் நிகில் பிரேம் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘7 ஸ்டார் பாய்ஸ்’. கால்பந்து விளையாட்டின் பின்னணியில் உருவாகியுள்ள இதில் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் மற்றும் இந்திய கால் பந்தாட்ட அணியின் முன்னாள் வீரரான ‘ பிகில்’ ஐ எம் விஜயன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பயஸ் சித்திக் ஒளிப்பதிவு செய்ய,ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.இளம் கால்பந்து விளையாட்டு வீரர்களின் கால்பந்தாட்ட கனவின் பின்னணியில் உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இப்படத்தை அச்சாபு மூவி மேஜிக் மற்றும் மாஸ் மீடியா புரொடக்‌ஷன் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சி எஸ் ஸ்டான்லி , பைசல் லத்தீப் ,ஷோனி ஸ்டீஜோ செபஸ்டியன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தை பீனிக்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில்அசோக் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடுகிறார்.