Take a fresh look at your lifestyle.

பாகுபலி படம் குறித்து பிரபாஸ் பெருமிதம்

60

பாகுபலி படம் குறித்து பிரபாஸ் பெருமிதம்
“பாகுபலி: தி பிகினிங்” திரைப்படம் இந்திய சினிமாவின் போக்கையே மாற்றியமைத்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரபாஸ் இன்னும் மறுக்க முடியாத பான்-இந்தியா நடிகராக தொடர்ந்து வருகிறார். அந்த திரைப்படம் வசூல் சாதனைகளை மட்டுமல்ல, உலகம் முழுவதும் அறியப்பட்ட இந்திய நடிகர்களில் ஒருவராக பிரபாஸை மாற்றி, அவரை உலகளாவிய நட்சத்திரமாக உயர்த்தியது. தற்போது பாகுபலி:தி டச் பேரியர் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, பாகுபலி கதாபாத்திரம் தனது வாழ்க்கையில் ஏற்படுத்திய நம்ப முடியாத தாக்கத்தை பிரபாஸ் பகிர்ந்து கொண்டார். ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு ஏற்பட்ட தாக்கம் சொல்ல முடியாத அளவுக்கு இருந்தது. இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலியுடன் பணியாற்றியது எனக்கு கிடைத்த பெரிய கௌரவம். ‘பாகுபலி’ உலகின் எத்தனை இடங்களை சென்றடைந்திருந்தது என்பது உண்மையிலேயே ஒரு மாயாஜாலம்.” என்றார்.