Take a fresh look at your lifestyle.

நிஜ வாழ்க்கையில் கைக்கோர்க்கும் ஆனந்த் ராம் – பிரிகிடா

71

நிஜ வாழ்க்கையில் கைக்கோர்க்கும் ஆனந்த் ராம் – பிரிகிடா
ஆஹா கல்யாணம் வெப் தொடரில் பலி டிச்சராக நடித்து பிரபலமானவர் பிரிகிடா. தொடர்ந்து மாஸ்டர், இரவில் நிழல், கோழி பண்ணை செல்லதுரை, மார்கன், ஹாட் ஸ்பாட்-2 ஆகிய படங்கள் மூலம் வளரும் நடிகையாக உள்ள இவர் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். மீசைய முறுக்கு படத்தில் ஹிப்ஆப் ஆதியின் தம்பியாக நடித்துள்ள ஆனந்த் ராம் என்ற நடிகரை காதலிக்கிறார். நடிகர் ஆனந்த் ராமின் பிறந்தநாளில் தங்களது காதலை நெகிழ்ச்சியான சமூக ஊடகப் பதிவின் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு ள்ளனர். நடிகர் ஆனந்த் ராம் தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார்.இந்த ஜோடியின் திருமணம் இந்த ஆண்டே நடைபெறவுள்ளது.