‘அரூபி ‘படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு
பி கே ஆர் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணய் காளியப்பன் வெளியிடும் படம் அருபீ.இந்த படத்தை மலையாளத்தை சேர்ந்த புதுமுக இயக்குனர் அபிலாஷ் வாரியார் இயக்குகி றார். இப்படத்திற்கு ஆமன் ஒளிப்பதிவு செய்ய,கோபி சுந்தர் இசையமைதுள்ளனர். புணர்த்தம் ப்ரொடக்ஷன் சார்பாக பிரதீப் ராஜ் படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் ஜாய் மேத்யூ , வைசாக் ரவி , நேஹா சாவ்லா , சாக்ஷி பாதலா , சிந்து வர்மா , கிரண் ராஜ் , கண்ணன் சாகர் , விஜி பால் , ஆதித்ய ராஜ் , அபிலாஷ் வாரியர், மேத்யூ ராஜு, நெபு ஆபிரகாம்,சுஜா ரோஜா, அஞ்சனா மோகன், ஏஞ்சல் மரியா ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரர் திரில்லராக தயாராகி யுள்ள இப்படம் நாளை 3ம் தேதி தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளிவருகிறது.