Take a fresh look at your lifestyle.

‘ மம்மட்டியான் ஸ்டார்ஸ்’-விமர்சனம்

12

‘ மம்மட்டியான் ஸ்டார்ஸ்’-விமர்சனம்
கிராமத்தில் மம்மட்டியான் ஸ்டார்ஸ் என்ற பெயரில் கிரிக்கெட் விளையாடி வரும் வைபவ் முருகேசன், வெங்கட பாலமுரளி, ஜகபர் சாதிக் மற்றும் லாவண்யா ஆகியோர் சென்னையில் நடக்கும் கிரிக்கெட் போட்டிக்கு நேரில் சென்று தோனியை பார்க்க வேண்டி சில வேலைகளை செய்து சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். அதிலிருந்து எப்படி மீண்டார்கள்? கிரிக்கெட் போட்டியை பார்த்தார்களா? இல்லையா? என்பதை மீதி கதை. ஹாரர்,ஆக்சன் மற்றும் காமெடி கதைகளை பார்த்து பழகிய ஓடிடி ரசிகர்களுக்கு புதுவித அனுபவமாக கிரிக்கெட் கதையை ரசிக்கும் படியாக கொடுத்துள்ளார் இயக்குனர் சவிர் சுதாகர். தல தோனி ரசிகர்களாக நடித்துள்ள வைபவ் முருகேசன், வெங்கட பாலமுரளி, ஜகபர் சாதிக் மற்றும் லாவண்யா ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். அதேபோல் மொட்ட ராஜேந்திரன்,விவேக் பிரசன்னா, சம்பத் ராம் உள்ளிட்டோரும் கதைக்கு பலமாக உள்ளனர்.