Take a fresh look at your lifestyle.

அந்தரன் – விமர்சனம்

8

அந்தரன் – விமர்சனம்
ஹீரோயின் இவானாவை காதலித்தவர் கொலை செய்யப்பட, அடுத்ததாக அவருக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையும் மர்மமான முறையில் உயிரிழக்கிறார். அதன் பிறகு அவரை திருமணம் செய்ய வரும் நபரும் இறந்து போகிறார். இந்தத் தொடர் மரணங்கள் குறித்து போலீஸ் அதிகாரியான பிரஜின் விசாரிக்க தொடங்குகிறார். ஒரு கட்டத்தில் பிரஜின், அவரையே காதலிக்க தொடங்குகிறார். அதன் பிறகு பிரஜின் வாழ்க்கை என்ன ஆனது? இந்த தொடர் கொலைகளுக்கு பின்னால் இருப்பது யார்?  என்பதே படத்தின் மீதிக்கதை.

தொடர் கொலை, போலீஸ் விசாரணை என வழக்கமான கிரைம் திரில்லர் கதையை, தன் திரைக்கதை மூலம் சுவாரஸ்யப்படுத்தி ரசிக்கும்படி இயக்கியிருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் ராவணன்.சில இடங்களில் லாஜிக் குறைகளும் இருக்கின்றன. போலீஸ் அதிகாரியாக வரும் பிரஜின், அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். அறிமுக நடிகையான இவானா வருண் முதல் படத்திலேயே ஸ்கோர் செய்துள்ளார். எம்.கே. சாம்பசிவம், செந்தி குமாரி உள்ளிட்ட மற்ற நடிகர்களின் நடிப்பு படத்துக்கு பலம். கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு, ஹரி.எஸ்.ஆர் பின்னணி இசை ஓகே ரகம்.